நான் என்ன சொல்லுவேன் - Nan enna solluven

நான் என்ன சொல்லுவேன்

என் இயேசுவின் அன்பை

நான் எப்படி பாடுவேன்

அவர் எனக்காய் செய்ததை

தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே

தகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்திரே

தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே

தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே

நான் என்ன சொல்லுவேன்

உம்மை எப்படி பாடுவேன்

அனாதையாய் தனிமையிலே அலைந்த என்னையே

தேடி ஓடி வந்து ஆதரித்தீரே

விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே

விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே

பாழான நிலமாக இருந்த என்னையே

பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே

கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்

கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே

நான் உம்மை உயர்த்துவேன்

உமதன்பை பாடுவேன் - இயேசுவே

நான் என்ன சொல்லுவேன் - Nan enna solluven

Nan enna solluven

en yesuvin anbai